த்ரிஷாவுக்கு வாழ்த்து சொல்வாரா வருண் மணியன் ?

Bookmark and Share

த்ரிஷாவுக்கு வாழ்த்து சொல்வாரா வருண் மணியன் ?

தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா இன்று அவரது 33வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். த்ரிஷாவுக்கு பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால், கடந்த பத்து நாட்களாக இருவரும் பிரிந்து விட்டதாகவும், இருவருக்கும் திட்டமிட்டபடி திருமணம் நடக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் தகவல்கள் வெளியாகின.

த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடன் முன்னர் கிசுகிசுக்கப்பட்ட தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உட்பட நடிகர் விஷால், மாதவன், ஜெயம் ரவி, நடிகைகள் டாப்ஸீ, ஹன்சிகா, நிகிஷா பட்டேல், கார்த்திகா, வரலட்சுமி, இயக்குனர் செல்வராகவன் உட்பட பலர் டிவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள்.  

ராணா டகுபதியின் வாழ்த்துக்கு 'தாங்க் யூ சைக்கோ' என த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார். அந்த 'சைக்கோ' என்ற வார்த்தையை நடிகர் விஷால் , தன்னுடைய வாழ்த்தில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷா, வருண் மணியன் உண்மையிலேயே பிரிந்து விட்டார்களா அல்லது அது வெறும் வதந்தியா என்பதை இன்று தெரிந்து கொள்ளலாம். த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு வருண் மணியன் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.

அவர் வாழ்த்து தெரிவிப்பாரா இல்லையா என்பதை இன்று வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களது பிரிவு பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களின் பேச்சுக்களுக்கும், வதந்திகளுக்கும் தன்னுடைய பிறந்த நாளிலாவது த்ரிஷா  முற்றுப் புள்ளி வைப்பாரா என்று பார்ப்போம்.

 


Post your comment





Related News
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
மற்றொரு நடிகையுடன் காதலில் விழுந்த திரிஷாவின் முன்னாள் காதலர் (படம் உள்ளே)
கமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி ட்விட்!
தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி
தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்
த்ரிஷா விலகினாரா...? விலக்கப்பட்டாரா...? உண்மை தான் என்ன?
திரிஷாவின் திருமணம் நின்றதற்கு தனுஷ் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions