த்ரிஷா விலகினாரா...? விலக்கப்பட்டாரா...? உண்மை தான் என்ன?

Bookmark and Share

த்ரிஷா விலகினாரா...? விலக்கப்பட்டாரா...? உண்மை தான் என்ன?

த்ரிஷா - வருண் மணியன் இடையே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இப்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

திருமணமும் நின்றுவிட்டது. இதனால் த்ரிஷா நடந்ததை மறந்துவிட்டு, நான் தனியாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறி வருவதோடு, மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்சமயம் த்ரிஷா, கமல் படம், சிம்பு படம், சுந்தர்சி.யின் அரண்மனை-2, தெலுங்கில் இரண்டு படம் என அரை டஜன் படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் செல்வராகவன் இயக்கத்தில், சிம்புவுடன் நடிக்கயிருந்த படத்தில் த்ரிஷா விலகிவிட்டதாக தற்போது கோலிவுட்டில் செய்திகள் உலா வருகின்றன.

ஏன்.? என்ன பிரச்னை!அதாவது செல்வராகன் படத்தை புதியவர் ஒருவர் தயாரிக்க இருந்ததாகவும், அவர் வருண் மணியனின் நண்பர் என்றும் கூறப்படுகிறது.

இந்தப்படத்தில் த்ரிஷா நடிப்பதை வருண் மணியன் விரும்பவில்லை என்றும், அதனால் அவரை இப்படத்திலிருந்து நீக்கும்படி வருண் சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் த்ரிஷா காதுகளுக்கு எட்ட, அவரே இப்படத்திலிருந்து விலகி கொள்கிறேன் என்று கூறிவிட்டாராம். இதுஒருபுறம் இருக்க கமலின் புதிய படம் மற்றும் அரண்மனை-2 என அடுத்தடுத்து த்ரிஷாவுக்கு படங்கள் இருப்பதாலும், இதில் கமல் படத்திற்கு அதிக கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும், அதனால் தான் செல்வராகவன் படத்திலிருந்து அவர் விலகிவிட்டார் என்றும் கோலிவுட்டில் செய்திகள் உலா வருகிறது.

இதில் எது உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் ஒழிய இதுபோன்ற செய்திகள் உலாவி கொண்டு தான் இருக்கும்.


Post your comment





Related News
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
மற்றொரு நடிகையுடன் காதலில் விழுந்த திரிஷாவின் முன்னாள் காதலர் (படம் உள்ளே)
கமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி ட்விட்!
தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி
தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்
திரிஷாவின் திருமணம் நின்றதற்கு தனுஷ் காரணமா?
த்ரிஷாவுக்கு வாழ்த்து சொல்லலையே வருண்மணியன் !!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions