த்ரிஷா திருமணம் பற்றி பரவும் வதந்தி?

Bookmark and Share

த்ரிஷா திருமணம் பற்றி பரவும் வதந்தி?

நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியின் இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், கடந்த சில நாட்களாக தெலுங்கு மீடியாக்களில் த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவர்கள் இருவருக்கும் பல்வேறு விஷயங்களில் ஒத்துப் போகவில்லை என்றும், கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும், அதனால் 'பிரேக்-அப்' ஆகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

அதோடு 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பின் த்ரிஷாவுக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் த்ரிஷா தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறாராம். அது வருண்மணியனுக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.

இதனிடையே, சமீபத்தில் வருண்மணியன் வீட்டில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவிற்கு த்ரிஷா செல்லவில்லையாம். அதோடு நிச்சய மோதிரத்தையும் த்ரிஷா அணியாமலேயே இருக்கிறார் என தெலுங்கு மீடியாக்கள் காரணம் சொல்கின்றன.

இது பற்றி மேலும் வதந்திகள் பரவுவதற்குள் சம்பந்தப்பட்ட த்ரிஷா, வருண் மணியன் இருவரும் உண்மை நிலவரத்தைச் சொன்னால் அவர்களுக்கு மிகவும் நல்லது. இல்லையென்றால் பல்வேறு விதமான கட்டுக் கதைகள் பரவிக் கொண்டே இருக்கும். 


Post your comment





Related News
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
மற்றொரு நடிகையுடன் காதலில் விழுந்த திரிஷாவின் முன்னாள் காதலர் (படம் உள்ளே)
கமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி ட்விட்!
தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி
தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்
த்ரிஷா விலகினாரா...? விலக்கப்பட்டாரா...? உண்மை தான் என்ன?
திரிஷாவின் திருமணம் நின்றதற்கு தனுஷ் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions