சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க திரிஷா, வருண்மணியன் திட்டம்?

Bookmark and Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க திரிஷா, வருண்மணியன் திட்டம்?

நடிகை திரிஷா தயாரிப்பாளராகிறார். சினிமாவுக்கு முழுக்கு போட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தொழில் அதிபர் வருண்மணியனை மணக்கிறார். இவர் வாயை மூடி பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களை தயாரித்து உள்ளார்.

திரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிப்பாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது அவரிடம் ‘என்னை அறிந்தால்’, ‘பூலோகம்’, ‘அப்பா டக்கரு’ ஆகிய மூன்று தமிழ் படங்களும் ‘லயன்’ தெலுங்கு படமும் கைவசம் உள்ளது. இவற்றில் ‘என்னை அறிந்தால்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5–ந்தேதி ரிலீசாகிறது. இதில் அஜித் ஜோடியாக நடித்து இருக்கிறார். ‘பூலோகம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது.

திருமணத்துக்கு பிறகு வருண்மணியனுடன் இணைந்து திரிஷா படங்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கதைகள் கேட்டு வருகிறாராம். முதலாவதாக திரு இயக்கும் படத்தை தயாரிக்கப் போகிறாராம்.

இவர் ஏற்கனவே விஷாலை வைத்து சமர், நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை படங்களை டைரக்டு செய்தவர். இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அத்துடன் திரிஷாவும் வருண்மணியனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை வாங்குவது பற்றி யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இந்த அணி விற்பனைக்கு வருகிறது.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions