திரிஷாவின் கல்யாண போட்டோவால் பரபரப்பு

Bookmark and Share

திரிஷாவின் கல்யாண போட்டோவால் பரபரப்பு

திரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சில மாதங்களுக்கு முன் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த மார்ச் மாதமே அவர்களது திருமணம் நடக்க உள்ளதாக முதலில் பேச்சு எழுந்தது.

ஆனால் திரிஷா நடித்துள்ள ‘பூலோகம்’ உள்ளிட்ட சில படங்கள் திரைக்கு வராமலிருந்ததால் திருமணத்தை தள்ளிவைத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து திரிஷாவுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து திருமண தேதி முடிவு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கைவசமிருந்த படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க திரிஷா ஒப்புக்கொண்டு வருகிறார். இதனால் திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தனது இணைய தள பக்கத்தில் திரிஷா மணக்கோலத்தில் ஒரு ஸ்டில் வெளியிட்டார். திரிஷாவுக்கு வருணுடன் திருமணம் ஆகிவிட்டது. அப்போது அவர் மணக்கோலத்திலிருந்த தோற்றத்தைத்தான் ஸ்டில்லாக வெளியிட்டிருக்கிறார் என பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர்தான் அது புதியபடமொன்றிற்காக அவர் திருமண கோலத்திற்காக அணிந்த மேக்அப் என்று தெரிந்தது. அதன்பிறகே பரபரப்பு அடங்கியது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions