கோலிவுட்டின் வித்யா பாலன் ஆகிறார் த்ரிஷா

Bookmark and Share

கோலிவுட்டின் வித்யா பாலன் ஆகிறார் த்ரிஷா

சினிமாவில் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்தவர் த்ரிஷா. அதன்பிறகு அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் நாயகியானார். அந்த வகையில், 2002ல் தனது கேரியரை தொடங்கிய த்ரிஷா, 13 ஆண்டுகளில் அரை சதமடிக்கப்போகிறார்.  

இந்த நேரத்தில் நடக்கயிருந்த திருமணமும் நின்று போனதால், அடுத்தபடியாக சினிமாவில் ஒரு பெரிய இடத்தை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று முழுஉத்வேகத்தில் களத்தில் நிற்கும் த்ரிஷாவுக்கு, ப்ரியன் பாண்டியன் இயக்கத்தில் நடித்து வரும் போகி படம் ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, இனிமேற் கொண்டு தனக்கு மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடும் வாய்ப்பு அதிகமாக கிடைக்காது என்பதால், இந்த சந்தர்ப்பத்தில் ஹீரோயினியை மையப்படுத்தும் கதைகளில் நடித்து ஒரு இடத்தை பிடிக்கு நினைக்கிறாராம் த்ரிஷா.

அந்த வகையில், போகி படத்தில் அவருடன் இணைந்து பூனம் பாஜ்வா, ஓவியா ஆகியோரும் நடித்தாலும் அவர்களுக்கு சப்போட்டிங் ரோல்கள்தானாம். அதனால் இந்த படத்தில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி அடுத்து வித்யாபாலன் போன்று ஒரு நடிகையாக உருவெக்கப்போகிறாராம் த்ரிஷா.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions