டப்பிங் தொடர்களுக்கு எதிர்ப்பு: டி.வி. நடிகர்–நடிகைகள் இன்று வேலை நிறுத்தம்

Bookmark and Share

டப்பிங் தொடர்களுக்கு எதிர்ப்பு: டி.வி. நடிகர்–நடிகைகள் இன்று வேலை நிறுத்தம்

டி.வி.யில் டப்பிங் தொடர்கள் ஒளிபரப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெலிவிஷன் நடிகர்– நடிகைகள் இன்று வேலை நிறுத்தம் செய்தார்கள்.

டெலிவிஷன்களில் பிறமொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். இதனால் தமிழகத்தில் சின்னத்திரை கலைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

வேலை வாய்ப்புகளும் குறைந்து விட்டன. எனவே பிறமொழி தொடர்களை மொழி மாற்றம் செய்து ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு வற்புறுத்தியது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.வி. நடிகர்–நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்ல வில்லை. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. டி.வி. தொடர் இயக்குனர்கள், பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் வடபழனியில் இன்று கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் மொழி மாற்று தொடர்களை ஒளிபரப்புவதை நிறுத்தும் படி டெலிவிஷன் நிர்வாகத் தினருக்கு நேரில் சென்று கோரிக்கை மனு கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 


Post your comment





Related News
பிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
அடையாளம் தெரியாத அளவு புது கெட்டப்புக்கு மாறிய ராஜா ராணி ஆலியா மானஸா
பிக் பாஸ் செட்டில் தகராறு, நிகழ்ச்சி நிறுத்தம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ்? இதுக்கு தான் இந்த பிளானா?
அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!
இவங்க எல்லாரும் குள்ளம் தான் - தொகுப்பாளிகளுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions