உதயாவை புறக்கணிக்கும் ஆவிகுமார்

Bookmark and Share

உதயாவை புறக்கணிக்கும் ஆவிகுமார்

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தம்பி, உதயா 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு வெற்றி அமையவில்லை.

தற்போது அவர் நடித்து வருகிற 24ந் தேதி வெளிவர  இருக்கும் படம் ஆவிகுமார். கே.காண்டீபன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார், விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், உதயாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆவிகுமார் படத்தின் விளம்பரங்களில் அவரது படத்தை வெளியிடுவதை தவிர்த்து வந்தனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில்கூட உதயாவின் பெயரைப் போடவில்லை.

என்றாலும், அந்த விழாவில் உதயா கலந்து கொண்டார். அதன் பிறகு சமாதானபேச்சு வார்த்தை நடந்து சமாதானமாவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பட வெளியீடு தொடர்பான விளம்பரங்களிலும் உதயாவின் படம் இடம் பெறவில்லை. மீண்டும் அவரை புறக்கணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதனால் உதயா, படத்தில் தான் நடித்த காட்சியின் படங்களை தனியாக மீடியாக்களுக்கு அனுப்பி உள்ளார். தயாரிப்பாளருக்கும், உதயாவிற்குமான கருத்து வேறுபாட்டிற்கான காரணம் தெரியவில்லை.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions