கமர்சியல் கதை தேடும் உதயா!

Bookmark and Share

கமர்சியல் கதை தேடும் உதயா!

திருநெல்வேலி படத்தில் அறிமுகமானவர் நடிகர் உதயா. டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனான இவர், ரா ரா படத்திற்கு பிறகு விஜய் நடித்த தலைவா படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்தார்.

அதோடு ஆவி குமார் என்ற படத்திலும் நடித்துள்ளார்.  இந்த நிலையில், அடுத்து தான் நடிக்கும் புதிய படத்திற்கான வேலைகளில் தற்போது இறங்கியிருக்கிறார் உதயா.

அந்த படத்தை தானே தயாரிக்கவும் திட்டமிட்டிருப்பவர், அதற்காக தீவிரமாக கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே ரா ரா, ஆவிகுமார் படங்களுக்கும் பல கதைகள் கேட்டு அதன்பிறகுதான் அந்த கதைகளை ஓகே பண்ணி நடித்தார்.

ஆனால் அப்படி அவர் தேடிப்பிடித்து நடித்த அந்த படங்களில் ரா ரா ஓடவில்லை. இப்போது ஆவிகுமாரும் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகவில்லை. அதனால் அடுத்து கமர்சியல்ரீதியாக வெற்றிபெறக்கூடிய அம்சங்கள் நிறைந்த கதையாக தேடுகிறார் உதயா.

இந்த செய்தி கோடம்பாக்கத்தில் பரவியதை அடுத்து ஏராளமான புதுமுக டைரக்டர்கள் கதைகளுடன் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions