வழக்கறிஞரான நடிகர் உதயநிதி!

Bookmark and Share

வழக்கறிஞரான நடிகர் உதயநிதி!

“என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் “மனிதன்”.

“ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணியுடன் இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார். படத்தின் கலை இயக்குநர் செல்வகுமார் மற்றும் எடிட்டிங் மணிகண்ட பாலாஜி.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமுக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது மனிதன் திரைப்படம். படத்தின் பாதி நீதிமன்றத்தை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான முறையில் நீதிமன்ற வளாகமும், சென்னையிலுள்ள மண்ணடி தெருவை பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்ட தெருவும்,

அதில் தினமும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களையும், முன்னணி நடிகர்கள், நடிகைகளையும் கையால்வது பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது என்று இயக்குநர் அஹமத் கூறியுள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படபிடிப்பு சென்னை, சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions