இறுதி கட்டத்தில் கெத்து

Bookmark and Share

இறுதி கட்டத்தில் கெத்து

நண்பேண்டா படத்தின் 50வது நாள் நேற்று. ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படமான கெத்துவின் நிறைவு பகுதிக்கு வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. இன்னும் சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது உள்ளது.

இதுவரை நெக்ஸ்ட் ஸ்டோர் பாய் கேரக்டரில் நடித்து வந்த உதயநிதி சிவகார்த்திகேயன் காக்கி சட்டையில் ஆக்ஷன் ஆழம் பார்த்த மாதிரி உதயநிதி இதில் ஆக்ஷன் களத்தில் இறங்குகிறார். ஆனாலும் ஆக்ஷன் ஹீரோவாக இல்லை. படத்தின் உதயநிதி ஒரு அப்பாவி இளைஞர்.

எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு. தன் வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் உதயநிதியின் அப்பா சத்யராஜ் அவருக்கு நேர் எதிர். யார் தப்பு பண்ணினாலும் போட்டு பொளந்திட்டு வந்திடுவார். இப்படித்தான் ஒரு நாள் ஒரு ஏழரையை இழுத்துட்டு வந்துடுறார்.

அவர் மோதினது ஒரு பெரிய தாதா கும்பலோடு. விஷயம் குடும்பம் வரைக்கும் வருது. அதன் பிறகு அமைதியா இருந்த உதயநிதி என்ன செய்கிறார்ங்ற கதை. எமி ஜாக்சன் கலர் புல் ஹீரோயினாக நடித்திருக்கிறார். உதயநிதியின் கம்பெனி காமெடியன் சந்தானம் இந்தப் படத்தில் இல்லை. அவருக்கு பதில் கருணாகரன் நடிக்கிறார். ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions