சிவா, உதயநிதி, விக்ரம்பிரபுவின் குணங்களை கூறிய ஒளிப்பதிவாளர்

Bookmark and Share

சிவா, உதயநிதி, விக்ரம்பிரபுவின் குணங்களை கூறிய ஒளிப்பதிவாளர்

மைனா, கும்கி, மான்கராத்தே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணீயாற்றிய சுகுமார், அவர் பணியாற்றிய படங்களில் நடித்த நட்சத்திரங்கள் பற்றி மணம் திறந்துள்ளார். அதில், “ சிவகார்த்திகேயனுடன் மான்கராத்தே படத்தில் வேலை செய்தேன். 

ஒரு படத்தில் பணியாற்றிவிட்டு நட்பும் புரிதலும் ஏற்பட்டுவிட்டால் அடுத்த படத்திலும் பணிபுரிவது எளிதானது, மகிழ்ச்சியானது . அப்படி எங்களுக்குள் நல்ல நட்பு வரவே, என்  உழைப்பு பிடித்துப் போகவே அவரே 'காக்கிசட்டை'க்கு பரிந்துரை செய்தார். அது நட்பை விட உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பு என்பேன். 

அதேசமயம் நட்பு இருக்குன்னு வேலையில கோட்டை விட்டா அடுத்த முறை கூப்பிடமாட்டாங்க. இங்கே நட்போடு சேர்ந்த திறமை ரொம்ப முக்கியம். பெரிய நட்சத்திரக் குடும்பத்திலிருந்து வந்த விக்ரம்பிரபு எப்படி பழகுவாரோ என்று முதலில் தயங்கினேன். 

அவரோ ஒரு சகோதரர் போல சுலபமாகப்  பழகி,  அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுமளவுக்கு சகஜமாகிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் ​அரசியல் வாரிசு என்கிற எந்த எண்ணமும் இல்லாமல் எளிமையாகப் பழகினார். இன்றும் பழகுகிறார். இப்படி நிறைய பேர் சொல்லலாம். 

மைனாவுக்குப் பிறகு எவ்வளவோ உயரத்துக்கு போனாலும் எப்போதும் அதே குணத்துடன் பழகும், மனதுக்கு மேக்கப் போட்டுக்கொள்ளாத அமலாபாலையும் பிடிக்கும். எமிஜாக்சன்​  வெள்ளந்தியாகத்தான் பழகுகிறார். அவர் அழகு என்றால் அவர் பேச முயல்கிற தமிழ் மிக அழகு”. என்றார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions