மீண்டும் உதயநிதி படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

Bookmark and Share

மீண்டும் உதயநிதி படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நண்பேன்டா படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத் தேர்வாகியிருந்தார். ஆனால், சில காரணங்களால் அனிருத் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அதன்பிறகு இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் என்று அறிவித்தனர். ஆனால் தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்று உதயநிதி அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

உதயநிதி கதாநாயகனாக நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ தற்போது வெளியாக இருக்கும் ‘நண்பேன்டா’ படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்திருந்தார். தற்போது இப்படத்திற்கும் ஹாரிஸ் இசையமைப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். உதயநிதி தனது சொந்த நிறுவனமான ரெட்ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22ம் தேதி தொடங்கவுள்ளது. 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions