நாயகியின் பெயரை சொல்ல மறந்தவர்கள்...!

Bookmark and Share

நாயகியின் பெயரை சொல்ல மறந்தவர்கள்...!

ஒரு திரைப்படத்திற்கான அறிமுக விழா, இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு, வெற்றி விழா என பல விழாக்கள் நடக்கும் போது படத்தில் பங்கு பெற்றவர்களின் பெயரைச் சொல்லி முடிப்பதற்கே நீண்ட நேரமாகிவிடும்.

நமது பொறுமையை நிறையவே சோதிப்பார்கள். சில நேரங்களில் முக்கியமானவர்களின் பெயரைக் கூடச் சொல்ல மறந்து விடுவார்கள். னால், நேற்று நடந்த 'மிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தை வாங்கி வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் பெயரை அனைவரும் தவறாமல் குறிப்பிட்டனர்.

அதே சமயம், படத்தில் நகுல் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் பெயரைச் சொல்வதில் மட்டும் உதயநிதி ஸ்டாலினும், காமெடி நடிகர் சதீஷும் மறந்து விட்டனர். உதயநிதி ஸ்டாலின் பேசும் போது “நகுல் அவங்க கூட ஜோடியா நடிச்சவங்களோட லவ் டிராக் ஆகட்டும்,  நடிகர் சதீஷ் பேசும் போது, “இன்னொருத்தவங்க” என்றும் ஹீரோயின் பெயரை மறந்துவிட்டு, சொல்லத் தெரியாமல் தடுமாறி பொதுவாக சொல்லி சமாளித்து விட்டனர்.  

படத்தின் மற்றொரு ஹீரோயினான பிந்து மாதவி பெயர் மட்டும் ஞாபகமாக அவர்கள் குறிப்பிட்டாலும், ஐஸ்வர்யா தத்தாவின் பெயரைச் சொல்லாமல் விட்டு விட்டனர். உண்மையிலேயே நேற்று மேடையில் பிந்து மாதவியை விட, ஐஸ்வர்யா தத்தாதான் அழகான உடையுடன் அமர்ந்திருந்தார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions