மூன்றாவது தடவையாக யு சான்றிதழ் வாங்கிய உதயநிதி

Bookmark and Share

மூன்றாவது தடவையாக யு சான்றிதழ் வாங்கிய உதயநிதி

அரசியல்வாதியின் வாரிசாக இருந்த உதயநிதி ஸ்டாலின் படத்தயாரிப்பாளராக மாறி, பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார். உதயநிதி கதாநாயகனாக நடிக்க முடிவு செய்து கதை கேட்க ஆரம்பித்தபோது ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார்.

தான் நடிக்கும் படத்தில் ஆபாசம் வன்முறை இருக்கக் கூடாது. குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பதுபோல் தன்னுடைய படம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களின் கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் மூன்றாவது படமான நண்பேன்டா படமும் அவரது முந்தைய படங்களைப்போலவே குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்தானாம். நயன்தாரா உடன் இரண்டாவது முறையாக உதயநிதி இணைந்து நடித்துள்ள நண்பேன்டா படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது.  

ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று தணிக்கை ஆனது!  நண்பேன்டா படத்தை பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்திற்கு யு சர்டிஃபிகேட் வழங்கியிருக்கிறார்கள்.

இதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் இரண்டு படங்களுக்கும் யு சர்டிஃபிகேட்தான்! இப்போது நண்பேன்டா படத்திற்கும் யு கிடைத்திருக்கிறது.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions