உதயநிதிக்கு கெத்து படத்தில் இரண்டு நாயகிகள்

Bookmark and Share

உதயநிதிக்கு கெத்து படத்தில் இரண்டு நாயகிகள்

நண்பேன்டா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் சற்று அப்செட்டாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் கெத்து படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார்.
மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரனின் இயக்கத்தில்இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கெத்து படப்பிடிப்பு முடிந்த்தும் என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குநர் அஹமத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி.
இதயம் முரளி என்ற கதையில்தான் உதயநிதி முதலில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். பிறகு அந்த எண்ணத்தை மாற்றி, ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஜாலி எல்.எல்.பி. படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கினார்.அந்தக்கதைதான் தமிழுக்கு எற்ற சில மாற்றங்களுடன் தற்போது கெத்து என்ற பெயரில் உருவாக இருக்கிறது  
இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன மற்றும் ஆரம்பம் படத்தில் நடித்த அக்ஷரா  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.  ஒரு முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் நடிக்கிறார்.
பிருத்விராஜின் சிபாரிசில் வேதிகா பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் காவியத்தலைவன் என சிறந்த படங்கள் அமைந்தாலும் துரதிஷ்டவசமாக ஓடாமல்போனதால் வேதிகாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டதால் வேதிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாமல் போனது.இந்நிலையில், காவியத்தலைவன் படத்தில் வேதிகா உடன் இணைந்து நடித்த பிருத்விராஜ், வேதிகாவுக்கு ஒரு பட வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறார்.
இவர்கள் மீண்டும் இணைவது  மலையாளப் படத்தில். பிரபல ஒளிப்பதிவாளரான சுஜித் வாசுதேவ் இயக்குநராக அறிமுகமாகும் ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ் என்ற படத்தில்தான் வேதிகா - பிருதிவிராஜ் இணைந்து நடிக்கின்றனர்.
சுஜித் வாசுதேவ் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்த சிட்டி ஆஃப் காட், மெமரீஸ் செவன்த் டே ஆகிய மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.ரொமான்ஸ் மற்றும் காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் வெற்றியைப் பொறுத்தே வேதிகா மலையாளத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions