சென்டிமென்டுக்குள் சிக்கிய உதயநிதி!

Bookmark and Share

சென்டிமென்டுக்குள் சிக்கிய உதயநிதி!

உதயநிதி நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அப்படத்தில் இடம்பெற்ற வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலே என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது.

அதனால் அந்த பாடல் அடிக்கடி சேனல்களில் ஒளிபரப்பாகி உதயநிதியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. விளைவு, தனது அடுத்த படமான இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களுக்கும் அவரையே இசையமைக்க வைத்தார் உதயநிதி.

தனது புதிய படங்களான கெத்து, இதயம் முரளி படங்களுக்கும் அவரையே புக் பண்ணியிருக்கிறார். அதைப்பார்த்த சிலர், படத்துக்குப்படம் டைரக்டர்களை மாற்றுவது போன்று மியூசிக் டைரக்டரையும் மாற்ற வேண்டியதானே? என்று அவரிடம் சொன்னார்களாம்.

அதற்கு, நான் சினிமாவில் நடிப்பதற்கு முன்பிருந்தே ஹாரிஸ் ஜெயராஜியின் ரசிகன். அதனால்தான் எனது முதல் படத்துக்கு அவரையே இசையமைக்க வைத்தேன். அந்த படத்துக்கு அவர் கொடுத்த பாடல்கள் பெரிய ப்ளசாக அமைந்தன.

அடுத்தடுத்த படங்களுக்கும் எனக்கேற்ற பாடல்களாக கொடுத்து வருகிறார். அதனால் கதாநாயகிகளில் எனக்கு எப்படி நயன்தாராவை பிடிக்குமோ, அதேபோல் இசையமைபப்பாளர்களில் ஹாரிஸ் ஜெயராஜூம் பிடித்தமானவராகி விட்டார்.

அதனால் டைரக்டர்கள், கதாநாயகிகள் படத்துக்குப்படம் மாறினாலும் அவரை மட்டும் மாற்றுவதாக ஐடியாவே இல்லை என்று கூறினாராம் உதயநிதி.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions