உதயநிதியின் திடீர் மாற்றத்துக்கு முருகதாஸ் தான் காரணம்!

Bookmark and Share

உதயநிதியின் திடீர் மாற்றத்துக்கு முருகதாஸ் தான் காரணம்!

மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்துக்கொண்டிருக்கும் படம் கெத்து. 

இந்தப்படமும் உதயநிதியின் முன் வெளிவந்த படங்களை போன்று இருக்கும் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் நேற்று வெளியான கெத்து படத்தின் முன்னோட்டம் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

இந்தப்படத்தில் உதயநிதி ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு இருக்கிற வசதிவாய்ப்புக்கு அவர் என்னவாக வேண்டுமானாலும் நடிக்கலாம். 

ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நடிக்கவேண்டும் என்று மிகக்கவனமாக இருக்கிறார். அப்படி நினைப்பவர் ஆக்ஷன் கதையைத் தேர்ந்தெடுத்தது எப்படி? என்கிற கேள்வி பலருக்கு எழுந்தது. 

அதற்கு உதயநிதியே பதிலளித்துள்ளார். நேற்று அவருடைய பிறந்தநாளையொட்டி இயக்குநர் முருகதாஸ் உதயநிதிக்கு வாழ்த்துச் சொன்னார். அதற்கு நன்றி சொன்னதோடு, “கெத்து படம் உருவாக நீங்கள்தான் முக்கியமான காரணம், வித்தியாசமான முயற்சியில் நான் இறங்க நீங்கள் கொடுத்த நம்பிக்கையே காரணம்” என்று சொல்லியிருக்கிறார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions