உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நாளை ஆரம்பம்

Bookmark and Share

உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நாளை ஆரம்பம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது.

உதயநிதி கதாநாயகனாக நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ தற்போது வெளியாக இருக்கும் ‘நண்பேன்டா’ படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது 4-வது படமாக இப்படத்திற்கும் ஹாரிஸ் இசையமைக்கிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். உதயநிதி தனது சொந்த நிறுவனமான ரெட்ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை கொச்சியில் தொடங்குகிறது. அங்கு தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions