உதயநிதி-எமிஜாக்சன் டூயட் இன்று முதல் ஆரம்பம்!

Bookmark and Share

உதயநிதி-எமிஜாக்சன் டூயட் இன்று முதல் ஆரம்பம்!

தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே பிரபலமான கதாநாயகிகள் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் உதயநிதி. அந்த வகையில், ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகா, இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டாவில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த அவர், அடுத்து தான் நடிக்கும் படத்தில் ஐ பட நாயகி எமிஜாக்சனுடன் ஜோடி சேருகிறார்.

திருக்குமரன் இயக்கும் இந்த படத்திற்கு முதலில் கெத்து என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் அந்த தலைப்பு மாற்றப்பட இருப்பதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நண்பேன்டா படம் ஏப்ரல் 2-ந்தேதி வெளியாகயிருக்கும் நிலையில், தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தற்போது தொடங்கி விட்டார் உதயநிதி.

அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் இன்று முதல் தொடங்குகிறது. சில நாட்களுக்கு முன்பே யூனிட் அங்கு சென்று முகாமிட்டிருக்கும் நிலையில், நேற்று உதயநிதி, எமிஜாக்சன் உள்பட படத்தில் நடிப்பவர்கள் கேரளா சென்றுள்ளனர்.

மேலும், ஐ படத்தில் டூ-பீஸ் கெட்டப்பில் நடித்து இளவட்ட ரசிகர்களை நடுநடுங்க வைத்த எமிஜாக்சனுக்கு இந்த படத்தில் பாவாடை தாவணி காஸ்டியூம்தான்அதிகமாக கொடுக்கிறார்களாம். பாடல் காட்சிகளில் மட்டும்தான் கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions