ஆக்சன் கெத்து காட்டும் உதயநிதி!

Bookmark and Share

ஆக்சன் கெத்து காட்டும் உதயநிதி!

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்தவர் உதயநிதி. அந்த மூன்று படங்களிலுமே ரொமான்டிக் காதல் கதையில் நடித்த அவர், சந்தானத்துடன் இணைந்தும் காமெடி செய்தார்.

ஆனால் முதல் படத்தில் ஒர்க்அவுட்டான அவர்களின் காமெடி அடுத்தடுத்து படங்களில் பெரிதாக இல்லை. அதனால் முந்தைய படங்களின் சாயலே இந்த படங்களிலும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதனால் தற்போது எமிஜாக்சனுடன் இணைந்து தான் நடித்து வரும் கெத்து படத்தில் தனது முந்தைய காமெடியனான சந்தானத்தை ஏறக்கட்டிவிட்டு கருணாகரனை கூட்டணி சேர்த்துள்ளார் உதயநிதி.

அதோடு, பழைய டச் கொண்ட காமெடி சீன்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று காட்சிகளை கவனமாக தயார் செய்ய சொல்லி நடித்து வருகிறார். மேலும், இதுவரை நடித்த படங்களில் ஆக்சன் ஏரியாவுக்குள் பெரிய அளவில் இறங்கி அடிக்காத உதயநிதி, முதன்முறையாக இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் நடிக்கிறாராம்.

ஒரு காட்சியில் எமி ஜாக்சனை ரவுடிகள் கடத்திக்கொண்டு செல்ல, அவர்களை பின்தொடர்ந்து செல்லும் உதயநிதி, தனது ஹீரோயிசத்தைக்காட்டும் வகையில், ரவுடிகளுடன் பலமாக மோதும் சண்டை காட்சியில் நடிக்கிறார். இந்த சண்டை காட்சியை மட்டும் ஒரு வாரம் எடுக்கிறார்களாம். அந்த அளவுக்கு அதிரடியாக படமாக்கப்படுகிறதாம்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions