படபிடிப்பில் கெத்தாக பிறந்த நாள் கொண்டாடிய உதயநிதி

Bookmark and Share

படபிடிப்பில் கெத்தாக பிறந்த நாள் கொண்டாடிய உதயநிதி

உதயநிதி தற்போது இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அகமது இயக்கி வருகிறார்.

இப்படக்குழுவினருடன் உதயநிதி இன்று தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இதில் இயக்குனர் அகமது, நடிகர்கள் ராதாரவி, பிரகாஷ் ராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டு உதயநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் ‘கெத்து’ படத்தின் டிரைலரையும் வெளியிட்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அமைந்துள்ளது.

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். திருகுமரன் இயக்கியுள்ளார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions