கொம்பனை நான் தடுக்கவில்லை: உதயநிதி விளக்கம்

Bookmark and Share

கொம்பனை நான் தடுக்கவில்லை: உதயநிதி விளக்கம்

கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்த கொம்பன் படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சாதி பிரச்னைகள் பற்றி காட்டப்படுவதாக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் படத்தில் அப்படி எதுவுமே இல்லை என்பது நேற்று படம் வெளிவந்ததும் தெரிந்து விட்டது. இந்த பிரச்னையை பெரிதாக கிளப்பியவர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

அவர் தற்போது தி.மு.க அணியில் இருக்கிறார். கொம்பன் அதிகப்படியான தியேட்டர்களை பிடித்து விட்டதால் நண்பேன்டா படத்துக்கு தான் நினைத்த தியேட்டர் கிடைக்காத கோபத்தில் உதயநிதி தான் கிருஷ்ணசாமியை தூண்டிவிட்டார் என்று பரவலாக பேசப்பட்டது. இதனை உதயநிதி கடுமையாக மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

நண்பேன்டா படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு மாத்திற்கு முன்பே அறிவித்து விட்டேன். கொம்பன் பட ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே எனது படம் 275 தியேட்டர்களில் திரையிட ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது.

கொம்பன் படம் வந்தாலும், எத்தனை தியேட்டர்களில் திரையிட்டாலும் அதனால் என் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் ஏன் கொம்பனை தடுக்க வேண்டும். பிறகு ஏன் என் பெயரை இழுத்து பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

ஒரு வேளை விளம்பரத்திற்காக என் பெயரை பயன்படுத்துகிறார்களோ என்று சிந்திகிக்க வேண்டியதிருக்கிறது என்கிறார் உதயநிதி.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions