இந்தி படத்தை ரீமேக் செய்யும் உதயநிதி?

Bookmark and Share

இந்தி படத்தை ரீமேக் செய்யும் உதயநிதி?

தயாரிப்பாளராக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிப்பட நாயகனாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது ‘மான்கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ‘கெத்து’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். தனது சொந்த தயாரிப்பில் இந்த படத்தை எடுத்து வருகிறார் உதயநிதி.

‘கெத்து’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், உதயநிதி பாலிவுட் படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஜாலி எல்எல்பி’. இந்த படத்தில் அர்ஷத் வர்ஷி மற்றும் போமன் இரானி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தைத்தான் உதயநிதி ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை உதயநிதி, தனது சொந்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க மட்டுமே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் நீதித்துறையில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவை சொல்லியிருக்கும். விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions