உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள மனிதன் படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள மனிதன் படப்பிடிப்பு முடிந்தது!

‘கெத்து’ படத்திற்கு பிறகு உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மனிதன்’. இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய இயக்குனர் அஹமத் இயக்கியுள்ளார்.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யை தொடர்ந்து ஹன்சிகா இரண்டாவது முறையாக உதயநிதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். 

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு,

சமூக அக்கறையுடன் இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்தியில் வெற்றி பெற்ற ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் ரீமேக்காக இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சாலக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்திருக்கின்றனர். இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions