உதயநிதி படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்த சந்தானம்

Bookmark and Share

உதயநிதி படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்த சந்தானம்

உதயநிதி நடிப்பில் வெளிவந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களில் சந்தானம் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த படங்களில் எல்லாம் உதயநிதியை விட சந்தானத்துக்கே அதிக முக்கியத்துவம் இருந்தது. மேலும், சந்தானத்தின் காமெடிக்காக இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது உதயநிதி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நண்பேன்டா’ படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். முந்தைய படங்களில் படம் முழுக்க ஹீரோவுடனேயே பயணிக்கும் சந்தானம், இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில்தான் நடிக்கிறாராம். இதற்காக குறைந்தது 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாராம்.

படத்தின் படப்பிடிப்பே 95 நாட்கள்தான் நடைபெற்றுள்ளது. இதுவரை சந்தானம் நடித்த படங்களுக்கு இத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்தது கிடையாதாம். இதற்கு காரணம் உதயநிதியுடனான நட்புதான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தானத்துக்கும்-உதயநிதிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால், உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், அதனை உதயநிதி தற்போது மறுத்துள்ளார். மேலும், சந்தானத்துடன் நட்புடன் பழகி வருவதாகவும் உதயநிதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions