உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Bookmark and Share

உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

பிரியதர்ஷன் இயக்கத்தில் மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் - நமீதா பிரமோத், பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் உதயநிதி ஒரு போட்டோகிராபராக நடித்திருக்கிறார். தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து விஜய் டிவி கைப்பற்றியிருக்கிறது. 

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை விரைவில் வெளியாக இருப்பதாக சசமீபத்தில் உதயநிதி அறிவித்துள்ளார்.   இது குறித்து விஜய் டிவியின் 'பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், '' குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான  படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போட்டுள்ளோம். 

'நிமிர்' அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம் '' என்றார்.


Post your comment





Related News
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்
உதயநிதியின் கிண்டலும், ஹெச்.ராஜாவின் பதிலடியும்
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
வைரலான தளபதியின் ஒர்க்அவுட் வீடியோ
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions