மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்

Bookmark and Share

மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்

பொதுவாக ஒரு படம்  எந்த வகையை சேரும் ,அப்படத்தில்  என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க  அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும்.

உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் , பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் M S பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'நிமிர்' என்ற தலைப்பை குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில் , '' எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரிய  ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன்.

ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 'நிமிர் ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான்  பல காலமாக ஒருவருக்கு ரசிகனாக இருந்து தற்பொழுது அவரையே இயக்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தை தருகின்ற ஒரு உணர்வு .

இப்படத்தின் கதையை முழுவதும் கேட்டதும் மகேந்திரன் சார்  தான் 'நிமிர்' என்ற தலைப்பை பரிந்துரை செய்தார். இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பை எங்களால் யோசிக்க முடியாது. படத்தில் ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் மகேந்திரன் சார் நடித்துள்ளார். இந்த மகன்-தந்தை உறவே இக்கதையின் அடித்தளம் ஆகும். 'நிமிர்' மிகவும் திருப்திகரமாக வந்துருக்கின்றது. ''

ஏகாம்பரம் ஒளிப்பதிவில், டர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில் , ஐயப்பன் நாயர் M S  படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனம்  மற்றும் மோகன் தாஸின் கலை இயக்கத்தில் 'நிமிர்' உருவாகியுள்ளது.


Post your comment

Related News
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions