உதயநிதியுடன் இணைந்து நடிக்கும் விக்ராந்த்

Bookmark and Share

உதயநிதியுடன் இணைந்து நடிக்கும் விக்ராந்த்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். தற்போது இந்த கூட்டணியில் விக்ராந்த்தும் இணைந்துள்ளார்.

விக்ராந்த் சமீபத்தில் விஷாலுடன் இணைந்து ‘பாண்டிய நாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். இப்படத்தில் விக்ராந்த் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அதுபோல் உதயநிதியுடன் இணைந்து நடிக்கும் படத்திலும் விக்ராந்த்தின் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை உதயநிதி தனது சொந்த நிறுவனமான ரெட்ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions