உதயநிதியின் புதிய படத்தில் விஷ்ணு விஷால்

Bookmark and Share

உதயநிதியின்  புதிய படத்தில் விஷ்ணு விஷால்

உதயநிதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘கெத்து’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அகமது இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், சுசீந்திரன் இயக்கும் புதிய படத்திலும் உதயநிதி ஒப்பந்தமாகியிருந்தார். 

இப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்கப்போவதாக ஏற்கெனவே உறுதியாகியிருந்தது. அதில் உதயநிதி மட்டுமே முதலில் கதாநாயகனாக உறுதி செய்யப்பட்டிருந்தார். தற்போது மற்றொரு ஹீரோவாக விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். 

விஷ்ணு விஷால் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைகிறார். 

மேலும், இப்படத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இமான் இசையமைக்கவுள்ளார். மதி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions