உதயநிதி படத்தின் மூலம் இணையும் இரண்டு இசையமைப்பாளர்கள்!

Bookmark and Share

உதயநிதி படத்தின் மூலம் இணையும் இரண்டு இசையமைப்பாளர்கள்!

சந்தோஷ் நாராயணன் தற்போது ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்காக மிகுந்த சிரத்தையுடன் பணியாற்றி வரும் சந்தோஷ் நாராயணன், உதயநிதி நடிக்கும் ‘மனிதன்’ என்ற படத்திற்கும் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை அனிருத் பாடியிருக்கிறாராம். ‘மனிதன்’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இந்த செய்தி தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. 

சமீபகாலமாக அனிருத் பாடும் பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட்டாகி வருவதால் இப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இந்த பாடலும் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். 

‘மனிதன்’ படம் இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘ஜாலி எல்.எல்.பி.’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் உதயநிதி ஹீரோவாகவும், ஹன்சிகா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். இவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

இப்படத்தை அஹமது இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் உதயநிதியே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions