வடிவேலுவுடன் மோதுகிறார் உதயா!

Bookmark and Share

வடிவேலுவுடன் மோதுகிறார் உதயா!

திருநெல்வேலி என்ற படத்தில் அறிமுகமானவர் உதயா. இவர் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன். டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் அண்ணன். சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே இவர் நாயகனாக நடித்த ஒரு படம்கூட வெற்றி பெற்றதில்லை. ஆனபோதும் தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கிறார் உதயா.

தனது தம்பி ஏ.எல்.விஜய், நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய தலைவா படத்தில் வீடியோ குமார் என்ற வேடத்தில் நடித்த உதயா, அதையடுத்து ஆவிகுமார் என்ற த்ரில்லர் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

அவருடன் இணைந்து கனிகா திவாரி, ஜெகன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தை சிடுஎச் மூலம் வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தார் உதயா.

ஆனால், ஆவிகுமார் த்ரில்லர் படம் என்பதால் தியேட்டருக்கு வந்தால்தான் அதன் ரிசல்ட் முழுமையாக இருக்கும் என்று தியேட்டரில் ஆவிகுமாரை ரிலீஸ் செய்ய கடந்த சில மாதங்களாகவே முயற்சி செய்து வந்தார்.

ஆனால் பெரிய ஹீரோக்களின் படங்களாக வந்துகொண்டிருந்ததால் ஆவிகுமார் பின்வாங்கிக்கொண்டே வந்தது. இந்தநிலையில், வருகிற 19-ந்தேதி ஆவிகுமார் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் உதயா.

அதே நாளில் வடிவேலுவின் எலி படமும் வெளியாகிறது என்றபோதும ஆவிகுமாருக்கு போதுமான தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக அப்பட வட்டாரம் கூறுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions