நான் ரிலீஸ் செய்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன: உதயநிதி பெருமிதம்

Bookmark and Share

நான் ரிலீஸ் செய்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன: உதயநிதி பெருமிதம்

‘அட்டகத்தி’ தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ள படம் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’. ராம் பிரகாஷ் ராயப்பா கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார். வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரித்து உள்ளார்.

இந்த படத்தை ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:–

ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறைய படங்கள் தயாரித்து உள்ளது. நிறைய படங்களை வாங்கியும் வெளியிட்டு உள்ளது. தயாரித்த படங்களில் சில நன்றாக போகாமல் இருந்தாலும் வாங்கி வெளியிட்ட அனைத்து படங்களும் 100 சதவீதம் வெற்றி பெற்று இருக்கின்றன.

‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. பிறகு டிரெய்லரை பார்த்தேன் வித்தியாசமாக இருந்தது. உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் வி.சந்திரனை தொடர்பு கொண்டு படத்தை பார்க்க விரும்புவதாக கூறினேன்.

அவரும் படத்தை எனக்கு காட்டினார். சாதாரண படமாக இல்லை. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான விஷயம் இருந்தது. கமர்சியல் படத்துக்கான விஷயங்களும் இருந்தது. காதல் காட்சிகளும் சிறப்பாக இருந்தன. எனவே உடனடியாக அதை வாங்கி வெளியிட முன் வந்தேன். வருகிற 20–ந்தேதி இப்படம் ரிலீசாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறும்போது, மொபைல் போனை பலரும் உபயோகிக்கின்றனர். அந்த போன் பயன்பாட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது என்றார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்து உள்ளார். 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions