ரஜினி பட டைட்டிலில் உதயநிதி!

Bookmark and Share

ரஜினி பட டைட்டிலில் உதயநிதி!

தமிழ்த் திரையுலகத்தில் தலைப்புகளுக்கான பஞ்சம் கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. வரி விலக்குதான் அதற்கு முக்கியக் காரணம் என்பது சாதாரண ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் தங்களது படங்களுக்குப் பொருத்தமான தலைப்பு வைக்க முடியாமல் பலர் திணறிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கூட அவர்களது படங்களுக்கு தலைப்பே வைக்காமல் படப்பிடிப்பு நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதனால், பலர் பழைய படங்களின் தலைப்புகளைக் கொஞ்சமும் யோசிக்காமல் தங்களது படங்களுக்கு வைத்து வருகிறார்கள்.ரஜினிகாந்த் பட டைட்டில் வைப்பதுதான் பலருக்கும் பழைய டைட்டிலை வைப்பதில் ஒரு ஃபேஷன் இருக்கிறது.

எப்படியும் ரஜினிகாந்த் அளவிற்கு வசூல் நாயகனாக ஆக முடியாது, அவரது பெயரை வைத்தாவது அவர் பெற்ற ரசிகர்களில் கொஞ்சம் பேரை நாம் பிடிக்க மாட்டோமா என்றுதான் அவர்கள் அப்படி வைத்து வருகிறார்கள் என கோலிவுட்டிலேயே கிண்டலடிக்கிறார்கள்.

தற்போது ஜீவா நடிக்க போக்கிரி ராஜா, விஜய் சேதுபதி நடிக்க தர்மதுரை ஆகிய ரஜினி பட தலைப்புகள் கொண்ட படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இடையில் வீரா என்ற படத்தையும் அறிவித்தார்கள், ஆனால், அந்தப் படத்தின் சத்தத்தையே காணோம்.இப்போது உதயநிதியும் அவருடைய புதிய படத்திற்கு மனிதன் என்ற ரஜினி பட தலைப்பை வைத்திருக்கிறார்.

ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற ஜாலி எல்எல்பி படத்தின் ரீமேக்காக இந்தப் படம் ஆரம்பமாகி முடிவடையும் கட்டத்தில் உள்ளது. வழக்கம் போலவே படத்திற்குப் பொருத்தமான தலைப்பு, படத்தைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் அனுமதி பெற்று இந்தத் தலைப்பை வைத்துள்ளோம் என்று விளக்கமும் பின்னாடியே வரும்.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions