ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க பயந்த உதயநிதி!

Bookmark and Share

ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க பயந்த உதயநிதி!

உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கெத்து’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் உதயநிதி, எமிஜாக்சன், ராஜேஷ், கருணாகரன், விக்ராந்த், இயக்குனர் திருகுமரன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் உதயநிதி பேசும்போது, ‘நான் இதுவரை கமர்ஷியல், குடும்பப்பாங்கான படங்களில் மட்டும் நடித்திருந்தேன். முதல் முறையாக ஆக்‌ஷன் படத்தில் நடித்திருக்கிறேன். முதலில் படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் காமெடியாக சென்றது.

பின்னர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் பயந்தேன். பிறகு பழகிவிட்டது. வில்லனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் நானும், விக்ராந்தும் சண்டை போடும் காட்சி ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் எங்கள் இரண்டு பேரையும் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவழியாக்கிவிட்டார். இரண்டு பேருக்கும் காயம் எல்லாம் ஏற்பட்டது.

இப்படத்தின் கதைக்கு வில்லனாக, இந்தி நடிகர்கள் அல்லது பிற மொழி நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் கூறினார். ஆனால், நான் தான் இந்த கதாபாத்திரத்திற்கு விக்ராந்த் பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்தேன்.

விக்ராந்த்தை கேட்டபோது, என்னை டம்மி வில்லனாக்கி விடாதே என்று கேட்டார். அதற்கு நான், வில்லனை ஹீரோவாக காண்பித்தால் ஹீரோவுக்கு வேலை இருக்காது என்றேன்.

கருணாகரனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின் போது, எமிஜாக்சனை காப்பாற்றினார். சத்யராஜ் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். அனுபவம் வாய்ந்த நடிகருடன் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions