உதயநிதி படத்திற்கு அனிருத் தான் இசை...

Bookmark and Share

உதயநிதி படத்திற்கு அனிருத் தான் இசை...

உதயநிதி ஸ்டாலின், 'என்றென்றும்' அஹமது இணையும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. முதலில் இந்தப் படத்திலிருந்து அனிருத் வெளியேறிவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது அனிருத் விலகவில்லை, அவர்தான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலின் தற்போது ஜெகதீஷ் இயக்கத்தில் 'நண்பேன்டா' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வர உள்ளது. அடுத்து 'மான் கராத்தே' வெற்றிப் படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் 'கெத்து' என்ற படத்தில் உதயநிதி நடிக்கப் போகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். சந்தானம், கருணாகரன் ஆகியோரும் நடிக்கப் போகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.

அஹமது, உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் உடனே ஆரம்பமாகுமா அல்லது 'கெத்து' படம் ஆரம்பமான பிறகு ஆரம்பமாகுமா என்பது தெரியவில்லை. பொதுவாக உதயநிதி ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்.

ஆனால், தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவெடுத்திருப்பதுதான் ஆச்சரியமளிப்பதாக உள்ளது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions