வரிவிலக்கு வழக்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

Bookmark and Share

வரிவிலக்கு வழக்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சினிமா பட அதிபரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘‘எங்கள் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்துக்கு அரசியல் உள்நோக்கத்தோடு காலதாமதமாக கேளிக்கை வரி விலக்கு வழங்கியதால், வரிவிலக்கின் பயன் எங்களுக்கு கிடைக்காமல் போனது.

அந்த படத்துக்கு பின்னர் விண்ணப்பித்த பல படங்களுக்கு உடனடியாக வரிவிலக்கு வழங்கி பாரபட்சமாக நடந்து கொண்டதால், கேளிக்கை வரிவிலக்கு அளிக்க தமிழக அரசின் வணிக வரித்துறையால் கொண்டுவரப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.

வரிவிலக்கு கோரி விண்ணப்பித்த 2 வாரங்களுக்குள் கேளிக்கை வரிவிலக்குக்கு பரிந்துரை செய்யும் குழு திரைப்படத்தை பார்வையிட வேண்டும் என்றும், பார்வையிட்டு ஒரு வார காலத்துக்குள் தங்கள் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், பரிந்துரை கிடைத்த 2 வார காலத்துக்குள் அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முதலில் வந்த விண்ணப்பத்தை முதலில் பரிசீலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
காவேரி மருத்துவமனையில் 20 நிமிடங்கள் காத்திருந்த அஜித் - ஏன்? என்ன நடந்தது?
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions