உதயநிதியின் அடுத்த படம் ஆகஸ்ட் 21ம் தேதி தொடக்கம்

Bookmark and Share

உதயநிதியின் அடுத்த படம் ஆகஸ்ட் 21ம் தேதி தொடக்கம்

உதயநிதி தற்போது ‘மான்கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ‘கெத்து’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தையடுத்து உதயநிதி பாலிவுட் படமான ‘ஜாலி எல்எல்பி’ படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க இருக்கிறார். ‘ஜாலி எல்எல்பி’  படம் இந்தியில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் அர்ஷத் வர்ஷி மற்றும் போமன் இரானி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தை உதயநிதி, தனது சொந்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ராதாராவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அகமது இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்க இருக்கிறது. 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions