கெத்து பட விவகாரம்: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Bookmark and Share

கெத்து பட விவகாரம்: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க தமிழக அரசு மறுத்து, கடந்த ஜனவரி 14-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து கெத்து திரைப்படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.துரைசாமி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Post your comment





Related News
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மீண்டும் இணையும் ஓகே ஓகே வெற்றி கூட்டணி!
கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ!
கிருஸ்துமஸில் வெளியாகும் உதயநிதி – ரெஜினா படம்!
உதயநிதி – ரெஜினா பட படப்பிடிப்பு தொடங்கியது!
செப்டம்பரில் தொடங்கும் உதயநிதியின் புதிய படம்!!
உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் கேத்தரின் தெரசா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions