உதயநிதி ஜோடியாக மீண்டும் ஹன்சிகா

Bookmark and Share

உதயநிதி ஜோடியாக மீண்டும் ஹன்சிகா

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அப்போதைய முன்னணி நடிகையான ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

அதன் பிறகு அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களான  இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களிலும் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார்.

மற்ற முன்னணி ஹீரோக்கள் அளவிற்கு தனது ஜோடியைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர் உதயநிதி. இப்போது நடித்துக் கொண்டிருக்கும்  கெத்து  படத்திலும் ஐ பட நாயகியான எமி ஜாக்சனுடன் தான் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

அடுத்து  என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் மீண்டும் ஹன்சிகாவை தனது ஜோடியாக்கியிருக்கிறார்.

ஜாலி எல்எல்பி என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ள இந்தப் படத்தில் ராதாரவி, பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

படத்தின் தற்போது முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions