ஒரேநாளில் 10.5 கோடி வசூல்: உத்தா பஞ்சாப் சாதனை

Bookmark and Share

ஒரேநாளில் 10.5 கோடி வசூல்: உத்தா பஞ்சாப் சாதனை

பஞ்சாப் மாநில மக்கள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டால் சீரழிந்துவரும் அவலநிலையை சித்தரிக்கும் ‘உத்தா பஞ்சப்’ திரைப்படம் முதல்நாளில் 10.5 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘உத்தா பஞ்சாப்’ என்ற பஞ்சாபி திரைப்படமும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தப்படும் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், அதன் விளைவாக அங்கு நடைபெறும் கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும், குற்றச் செயல்களையும் சுட்டிக் காட்டுகிறது.

இந்தப் படத்துக்கு தடை விதிப்பது தொடர்பான பரபரப்பு சர்ச்சையால் மத்திய சென்சார் வாரியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் ரிலீஸ் தினத்தன்று மட்டும் ‘உத்தா பஞ்சப்’ 10.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றுள்ள இந்தப் படத்துக்கு டெல்லி, மும்பை போன்ற வடமாநில பெருநகரங்களில் நல்ல வரவேற்பும், இதர பகுதிகளில் சுமாரான வரவேற்பும் கிடைத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ வரும் ரம்ஜான் பண்டிகையின்போது ரிலீஸ் ஆகிறது. அதற்குள் ‘உத்தா பஞ்சாப்’ வசூலில் மந்திர தொகையான 100 கோடியை எட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions