உயிரே உயிரே விழாவில் அமர்சிங்!

Bookmark and Share

உயிரே உயிரே விழாவில் அமர்சிங்!

திருவிளையாடல் தருமி பாணியில் பிரிக்க முடியாதது எது என்றால்...ஜெயப்ரதாவையும்.. அமர்சிங்கையும் என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயப்ரதா வெறும் நடிகையாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு அறிமுகமாகி ஜெயப்ரதாவை அரசியலில் ஈடுபடுத்தியவர் அமர்சிங்தான்.

உபி அரசியலில் முக்கியப் புள்ளியான அமர்சிங் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார் ஜெயப்ரதா. தற்போது தன் மகன் சித்துவை கதாநாயகனாக்கி உயிரே உயிரே என்ற படத்தைத் தயாரித்துள்ளார் ஜெயப்ரதா.

ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை ராஜசேகர் இயக்கி உள்ளார். இவர் விஷாலை வைத்து ஏற்கனவே சத்யம் என்ற தோல்விப்படத்தை இயக்கியவர். சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட உயிரே உயிரே படம் ஒருவழியாக இப்போதுதான் முடிவடைந்துள்ளது.

வரும் சனிக்கிழமை இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா அமர்சிங்தான். இவருடன அனில்கபூர், மோகன்பாபு, அம்பரீஷ் போன்ற பிறமொழி கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions