43 வருடங்களுக்கு பிறகு ‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்

Bookmark and Share

43 வருடங்களுக்கு பிறகு ‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து தயாரித்து,இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 43 வருடங்களுக்கு பிறகு இந்த படம் புது பொலிவுடன் டிஜிட்டலில் விரைவில் வருகிறது.

இதில் மஞ்சுளா, லதா,சந்திரகலா,நாகேஷ்,அசோகன்,மனோகர்,தேங்காய் சீனிவாசன்,நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன்,மேட்டா ரூங்ராத் (தாய்லாந்து) ஆகியோர் நடித்துள்ளனர்.எம்.எஸ். விசுவநாதன் இசையில் கண்ணதாசன்,புலமைப்பித்தன்,வாலி, புலவர் வேதா ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

ஆர்.எம். வீரப்பன்,சாமி, லட்சுமணன் மூவரும் இணைந்து எழுதிய கதைக்கு சொர்ணம் வசனம் எழுதி உள்ளார்.ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ-70 பொருட்காட்சியிலும், சிங்கப்பூர்,மலேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளிலும் படத்தை பிரமாதமாக படமாக்கி இருந்தார் எம்.ஜி.ஆர்.

இதில் 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அத்தனையும் ஹிட். பல தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து ஓடிய இந்த படத்தை ரிஷீஷ் மூவிஸ் சார்பில் நாகராஜ் டிஜிட்டலில் வெளியிடுகிறார். 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
தமிழ் முகத்திற்காக ஐரினுக்கு சான்ஸ் கொடுத்த இயக்குனர்!
உதயா ராமகிருஷ்ணன் இயக்கும் “வெள்ளை உலகம்”
அப்துல் கலாமுடன் புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினர் சந்திப்பு
புதியதோர் உலகம் செய்வோம் படத்துக்கு அப்துல் கலாம் ஆலோசகர் பாராட்டு!
கலாமின் வழிகாட்டலில் உருவான புதியதோர் உலகம் செய்வோம்: நாகராஜன் ராஜா
இரண்டாம் உலகத்தை விட என்றென்றும் புன்னகையே பிடித்தது-ஹாரிஸ்..!
\'இரண்டாம் உலகம்\' படத்தில் அனிருத் இசையில் 3 பாடல்கள் இணைப்பு..!
300 திரையரங்குகளில் \'இரண்டாம் உலகம்\'..!
இரண்டாம் உலகத்தில் செல்வராகவனுடன் கருத்து மோதல்: ஹாரிஸூக்கு பதில் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions