உள்குத்து அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்

Bookmark and Share

உள்குத்து அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்

திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படம் 'உள்குத்து'. திருடன் போலீஸ் டீம் அப்படியே இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஹீரோயின் மட்டும் மாற்றம்.

தெலுங்கில் அந்தக்குமுண்டு படத்தில் அறிமுகமாகி வளர்ந்து வரும் ஈஸா என்பவர் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். நான் கடவுள் ராஜேந்திரன், காமெடியன் பாலா, ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா, ஜஸ்டின் பிரபாகர் இசை என திருடன் போலீஸ் டீம் இணைந்து பணியாற்றுகிறார்கள். நாகர் கோவில் பகுதியில் நடக்கும் கதை.

பெற்றோருடன் சந்தோஷமா இருக்கும் ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களுக்குள் என்ன மாற்றம் நடக்கிறது. அவர்களின் அன்பு எப்படி பரிணாமம் பெறுகிறது.

அல்லது ஓரிடத்தில் குவிகிறது என்பதை யதார்த்தமாகவும், காமெடியாகவும் சொல்கிற படம். அடுத்த மாதம் நாகர்கோவில் பகுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக அந்த பகுதியில் முகாமிட்டு படப்பிடிப்புக்கான லொக்கேஷன்களை தேர்வு ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மாவுடன் தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.


Post your comment





Related News
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்
தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'உள்குத்து' ரிலீஸ் அறிவிப்பு
பொங்கல் அன்று ரசிகர்களை மகிழ்விக்க வரும் 'உள்குத்து'
குளச்சலில் உள்குத்து ஷீட்டிங்!
திருடன் போலீஸ் டீமின் அடுத்த படைப்பு உள்குத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions