தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'உள்குத்து' ரிலீஸ் அறிவிப்பு

Bookmark and Share

தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'உள்குத்து' ரிலீஸ் அறிவிப்பு

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் - நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உள்குத்து'.

ஏற்கனவே தினேஷை வைத்து 'திருடன் போலீஸ்' படத்தை இயக்கியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக அவரை இயக்குகிறார். அதேபோல் 'அட்டகத்தி' படத்திற்கு பிறகு தினேஷும் - நந்திதாவும் இரண்டாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'பி.கே.பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜி.விட்டல் குமார் பேசுகையில்,

''தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட வெற்றிபெற்ற தரமான படங்கள் இதற்கு சான்று. இந்த நிலையில் 'உள்குத்து' படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம்.

இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார். நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா

ரசிகர்கள் 'உள்குத்து' படத்தை ரசித்து மகிழ்ந்து ஆதரவளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்''. என்றார். 


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ!
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
நடு இரவில் விஜய், தினேஷ் செய்த கலாட்டா- ஒளிப்பதிவாளர் அலறிய சம்பவம்
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விசாரணை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions