12 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இணையும் உமா ரியாஸ்

Bookmark and Share

12 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இணையும் உமா ரியாஸ்

சுந்தர்.சி இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வௌியாகி பெரும் பாராட்டை பெற்ற படம் அன்பே சிவம். கலகலப்பான படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி., இப்படியொரு படத்தை எடுத்தார் என ஆச்சர்யபட வைத்தது.

இப்படம் வணிகரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பல்வேறு பாராட்டுகளை குவித்தது. இப்படத்தில் கமல் ஜோடியாக கிரண் நடித்திருந்தார்.

ஆனால் அவரைகாட்டிலும், கமலை ஒருதலையாக காதலித்து, அவருடன் தெருகூத்து எல்லாம் கிட்டத்தட்ட ஒரு ஹீரோயின் போன்று நடித்திருந்தவர் உமா ரியாஸ். இப்படம் உமா ரியாஸ்க்கும் நல்ல பெயரை பெற்று தந்தது தொடர்ந்து அவ்வப்போது நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் உமா ரியாஸ்.

இந்நிலையில், பாபநாசம், விஸ்வரூபம்-2 படங்களை முடித்துவிட்ட கமல், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அதில் தனது அடுத்த படம் தூங்காவனம் என்றும், தனது உதவியாளர் ராஜேஸ் இப்படத்தை இயக்க இருப்பதாகவும் கமல் அறிவித்துள்ளார். படத்தின் மற்ற விபரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இதனிடையே தூங்கா வனம் படத்தில் கமல் உடன் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க இருக்கிறார். கூடவே முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜூம் நடிக்க இருக்கிறார். இப்போது நடிகை உமா ரியாஸூம, தூங்கா வனம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

அன்பே சிவம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் கமல் படத்தில் நடிக்கிறார் உமா ரியாஸ். இப்படம் ஆக்ஷ்ன், ப்ளஸ திகில் நிறைந்த கதையாக தூங்காத வனத்தின் கதையாக இருக்கும் என கமல் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
இணையத்தில் வரவேற்பை பெற்ற எம்பிரான் ட்ரைலர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions