கன்னட நடிகர் உபேந்த்ரா நடிப்பில் உருவாகும் உப்பி 2

Bookmark and Share

கன்னட நடிகர் உபேந்த்ரா நடிப்பில் உருவாகும் உப்பி 2

கன்னட திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனும் பன்முகம் கொண்ட நடிகர் உபேந்த்ரா, கன்னடத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

கன்னடத்தில் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் விஷால் - நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சத்யம் படத்தில், உபேந்த்ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அண்மையில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி படத்தில் உபேந்த்ரா முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெலுங்கில் இவர் நடித்த   S/O சத்யமூர்த்தி படத்தில் இவரது நடிப்பு பேசப்படும்படி அமைந்ததால், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில், 1999 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த உப்பி எனும் கன்னட திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது.

இதனை தெலுங்கிலும் வெளியிட உபேந்த்ரா திட்டமிட்டுள்ளாராம். சைகோ சம்மந்தப்பட்ட திகில் திரைப்படமான இப்படம் விரைவில் கன்னட மற்றும் தெலுங்கில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions