ராதா மோகன் இயக்கத்தில் உப்பு கருவாடு

Bookmark and Share

ராதா மோகன் இயக்கத்தில் உப்பு கருவாடு

First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன், நந்திதா நடித்து வரும்  திரைப்படம் ‘உப்பு கருவாடு’.இந்தப் படத்தின்  90% படப்பிடிப்பு வேலைகள் முடிந்து வேகமாக தயாராகி வருகிறது.

“படத்தின் திறம் குறையாமல் குறுகிய காலத்தில் நான் எழுதியதை என் எண்ணத்தின்படியே கொண்டு வர உதவிய அத்தனை கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். தரத்திலும் திறத்திலும்ச மரசம் செய்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.துரித வேகத்தில் படமெடுக்கும் போது  கூட அந்த கொள்கையை விட்டுக் கொடுக்காதவன் நான். மொழியின் முக்கியத்துவத்தை அறிந்தவன் நான் என்பதில் எனக்கு பெருமை. அந்த பெருமையே எனக்கு மொழி கெடாமல் dubbing செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. படப்பிடிப்பில் இருக்கும் கவனமும் நேர்த்தியும் என் படங்களின் டப்பிங்கிலும் இருக்கும்.

ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் தனது நடிப்பால் அதை பதிய செய்யும் ஒரு நடிகன் கருணாகரன். ‘உப்பு கருவாடு’ படத்தில் அன்றாடம் நம் பக்கத்து  வீட்டில் பார்க்கும் ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். தன்னை ஒரு கதாநாயகி என்று தன்னை குறுகிய வட்டத்தினுள் அடைக்காமல் தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு சரியான கதைகளும் படங்களும் கிடைக்க வேண்டும். அவ்வகையில் இருவருக்கும் ‘உப்பு கருவாடு’ ஒரு சிறந்த படமாய் அமையும்.” எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன்.

“ ராம்ஜி நரசிம்மன் போல் ஒரு உறுதுணையான தயாரிப்பாளர் கிடைத்தால் படத்தை சொன்ன தேதியில்  என்ன அதற்கு முன்னரே முடித்து விடலாம். MS பாஸ்கர், குமாரவேல், சாம்ஸ் என எனது ஆஸ்தான நடிகர் பட்டாளத்துடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டீவ் வாட்ஸ் இசையில் பாடல்கள்  ரசிகர்கள் மனதை கவரும் வகையிலும் கதையின் ஆழத்தை கூறும் வகையிலும் வந்துள்ளது. மேலும், அழகிய காட்சிகளால் மக்களை கவர ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி பேருதவி புரிந்துள்ளார்.

ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திகொள்ளக் கூடிய கதாப்பாத்திரங்களின் மூலம் சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் விரைவில் வருகிறது ‘உப்பு கருவாடு” என மிதமும் மிஞ்சும் நம்பிக்கையுடன் கூறுகிறார் ராதா மோகன்.


Post your comment

Related News
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
பொதுமேடையில் விஷால் வைத்த கோரிக்கை- கேட்பார்களா?
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!
கபாலி டீசர் செய்த அசைக்கமுடியாத சாதனை!
கபாலியுடன் இணைந்த பிரபல கார்பரேட் நிறுவனங்கள்!
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions