உப்புகருவாடு மீனவர்களின் கதையல்ல: ராதாமோகன்

Bookmark and Share

உப்புகருவாடு மீனவர்களின் கதையல்ல: ராதாமோகன்

ராதாமோகன் இயக்கி வரும் படம் உப்பு கருவாடு. கருணாகரன், நந்திதா நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. "உப்புகருவாடு என்று டைட்டில் வைத்திருப்பதால் இது மீனவர்களின் கதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் இது மீனவர்களின் கதையல்ல" என்கிறார் ராதாமோகன். அவர் மேலும் கூறியதாவது: அசைவ உணவுகளில் மிகவும் சுவையானது உப்புகருவாடு. உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் உணவாகிற உயிர்தான் மீன்.

எல்லோருக்கும் தொடர்புடையதுதான் உப்பு கருவாடு. தலைப்புக்கும் படத்தின் கதைக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. மொழி படத்தில் ஹீரோயினுக்கு வாய் பேச முடியாது.

அப்படியொரு முரண்பட்ட முடிச்சு இதில் இருக்கிறது. நம் வாழ்க்கை பயணத்தில் சில தடைகளை தாண்டி வேண்டியது வரும்போது சில சமரசங்களை செய்து கொள்கிறோம்.

சில  நேரங்களில் அந்த சமரசங்களே பூதாகரமாகி வாழ்க்கை முழுக்க துரத்த ஆரம்பிச்சிடும். அப்படி ஒரு விஷயத்தை படம் சொல்கிறது. பக்கத்து வீட்டு பையன் பொண்ணு மாதிரியான நடிகர்கள்தான் வேண்டும் என்று முடிவு செய்து கருணாகரன், நந்திதாவை தேர்வு செய்தேன். அவர்கள் ஹீரோ, ஹீரோயின்கள் அல்ல.

என் கதையின் மாந்தர்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு கடற்ரையோரம்தான் நடந்துள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து அடுத்த கட்ட வேலைகள் நடந்து வருகிறது. என்கிறார் ராதாமோகன்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions