ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரிப்பில் ‘உறுமீன்’

Bookmark and Share

ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரிப்பில் ‘உறுமீன்’

பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் ‘உறுமீன்’. இப்படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன், ஹீரோயினாக ரேஷ்மி மற்றும் மனோபாலா, அப்புக்குட்டி, காளி வெங்கட், சான்ட்ரா, லுக்மேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இது ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகி வருகிறது. பச்சையும், கருப்பையும் கலந்தால் சாம்பல் கலர் கிடைக்கும். காடுகளை குறிக்கும் நிறம் பச்சை. நகரத்தின் இன்னொரு முகத்தை சொல்வதற்கு கருப்பு குறியீடு.

கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன? அவற்றின் ஒரிஜினல் முகம் என்ன? இதைத்தான் த்ரில் கலந்து ‘உறுமீன்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ எனும் பழமொழிதான் படத்தோட கான்செப்ட்.

‘‘வேகமாக வேட்டையாடற உயரினம் சிறுத்தைன்னு நீங்க நினைச்சா தப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே வேகம் காட்டி வேட்டையாடுறது கொக்குதான்.’’ என்கிறார் இப்படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘நேரம் படம் பண்ணின காலத்திலிருந்தே சிம்ஹா என் ஃபிரண்ட். ‘ஜிகர்தண்டா’க்கு முன்னாடியே, இதை ஆரம்பிச்சிட்டோம். இந்தப்படத்திற்கு அப்புறம் சிம்ஹா இன்னும் பிஸியாகிடுவார், ‘மெட்ராஸ்’ல அன்புவாக நடிச்ச கலையரசன் மெயின் கேரக்டர் பண்றார். அவரையும் அடுத்த லெவலுக்கு அழைச்சுட்டு போகக்கூடிய படம் இது. ஹீரோயின் ரேஷ்மிமேனன். ‘இனிது இனிது’, ‘பர்மா’ படங்கள் பண்ணிருக்காங்க.’’ என்றார்.
 
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு இப்படத்தை தயாரிக்கிறார்.


Post your comment





Related News
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
எதிர்பார்ப்பை தூண்டும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’!
உறுமீன் கேம்மை ஆர்யா வெளியிட்டார்
டிசம்பர் 4 முதல் "உறுமீன்"
உறுமீன் மேக்கிங் வீடியோ சோனி மியூசிக் வெளியிடுகிறது
உறுமீன் ரிஷூட்...
கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்
அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்
மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா
25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்: உறுமீன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions